×

ஈரோடு கருமுட்டை விவகாரம்!: தமிழகத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு..!!

சென்னை: ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் அந்த சிறுமியும் அவரது உறவினர்களும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கருமுட்டையை விற்பனை செய்ய சிறுமியை ஆட்படுத்தியதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கருமுட்டையை விற்பதற்கு தூண்டிய சிறுமியின் தாய் சுமையா, சுமையாவின் 2வது கணவர் சையத் அலி, இடைத்தரகராக செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமியின் வயதை கூடுதலாக ஆவணங்களில் மாற்றிய ஜான் உட்பட 4 பேரை ஈரோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஈரோடு காவல்துறையினர் ஈரோடில் செயல்படும் பிரபல மருத்துவமனை மற்றும் பெருந்துறையை சேர்ந்த மற்றொரு மருத்துவமனைக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இந்நிலையில், இந்த விவகாரம் எதிரொலியாக இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. பெண்கள் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா குழுவில் உள்ளனர். குழுவின் உப தலைவராக குடும்ப நலத்துறை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட விதிமீறல்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை அபராகம் மற்றும் 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் ஒன்றிய அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது அமலுக்கு வந்துள்ள சட்டத்தின்படி 23 முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே கருமுட்டை எடுக்க முடியும். சட்டத்தை அமல்படுத்த மாநிலத்தில் விதிகளை அறிவிக்காத நிலையில் கருமுட்டை விவகாரத்தை அடுத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது….

The post ஈரோடு கருமுட்டை விவகாரம்!: தமிழகத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Erode ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...